நீயும் நானும்
வேறு  என்றாகி விட்ட
பல நாட்களின் பின்பு
திடீர்என
நானும் நீயும்
எதிர்பாராமல்
எதிரும் புதிருமாக
ஒருநொடி
சந்தித்து கொண்டோம்

உன்னை
பார்த்த அதிர்சியில்
வார்த்தைகள் வரவில்லை எனக்கு
ஆனால்
உன் கண்களில் தெரிந்தவற்றை
புரிந்து கொள்ளமுடியவில்லை
என்னால்

சந்தோஷமா
சங்கடமா
ஏக்கமா
தவிப்பா
எதுவும் புரியவில்லை
வலிக்கிறது எனக்குள்
எனக்கு சொந்தமான உன்னை
வேறொருத்திக்கு சொந்தமான பின்பு
சந்தித்தது ,,,,,,,

3 கருத்துரைகள்:

Anonymous said...

வலிகள் சுமந்த வரிகள் ! அழகு !!

Mathi said...

நன்றி அண்ணா

திவ்யா @ தேன்மொழி said...

எப்படி மனசாட்சியின்றி கூறுகிறார்களோ. காதலில் வலிக்கூட சுகம்தானென்று..! :(

Post a Comment