வனங்களை
தம் வாசஸ்த்தலமாக
கொண்டு வாழும்
பறவைகள்
வானத்தின் விளிம்புவரை -தம்
வசப்படுத்த நினைத்து
வானில் பறப்பதுபோல
நானும்
உன் காதலை வசப்படுத்த
உன் மனவீட்டில்
எதோ ஓர் முகம் தெரியாபறவையாய்
பறந்து கொண்டிருக்கிறேன்

வானத்தை
வசப்படுத்தி
தமக்குள் வைத்திருக்க
பறவைகளிக்கு
சின்ன இறகுகள் போதாது
அப்படித்தான்
உன் காதலை
வசப்படுத்த நினைக்கும் எனக்கும்
என் சின்ன இதயம்
போதாமல்
தவிக்கிறேன்

வானத்தின்
பக்கங்கள் முழுவதும்
பறவைகள்
தம் சிறக்குகளால்
காவியம் கிறுக்குவது போல
நானும்
உன் மனவீடு முழுவதும்
என் காதலால்
கவிதை கிறுக்குகிறேன் ........

7 கருத்துரைகள்:

aotspr said...

நல்ல கவிதை......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Learn said...

அருமையான வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

S.T.Seelan (S.Thanigaseelan) said...

//உன் காதலை
வசப்படுத்த நினைக்கும் எனக்கும்//

காதலை வசப்படுத்த இதயம் போதாது என்பது நல்ல கற்ப்பனை, நல்ல சொல்லாடல்...
அன்புடன்
சீலன்
http://vellisaram.blogspot.com/

எஸ்.மதி said...

உங்கள் வரவுக்கு நன்றி உறவுகளே

Anonymous said...

உன் மனவீடு முழுவதும்
என் காதலால்
கவிதை கிறுக்குகிறேன் ........
அருமை !!

எஸ்.மதி said...

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி உறவுகளே ,,,

Admin said...

உன் காதலை
வசப்படுத்த நினைக்கும் எனக்கும்
என் சின்ன இதயம்
போதாமல்
தவிக்கிறேன்..

எனக்கு பிடித்த இடம்..

Post a Comment