நீளமான இரவுகளைவிட
மிக நீளமாய் என்னை தொடர்கிறது
உன் நினைவுகள்

உனக்கு
என் நினைவுகள் வருகிறதோ இல்லையோ
எனக்குத்தெரியாது - ஆனாலும்
உன் நினைவுகள் எனக்குள்
நீளமாய்

உன்னிடம் பேசச்சொல்லி
குழந்தையாய் அடம்பண்ணும் மனதிடம்
என்ன சொல்லி புரியவைப்பது
உன் வேலையும் அதன் கஷ்டங்கள் பற்றியும்
சொன்னாலும் புரிந்து கொள்ளும் பக்குவம்
என் மனதுக்கு இல்லை

உன் வேலையோடு சேர்ந்து
உனக்குள் அதிகமாய் ஓடுவது என் நினைவுகள்தான்
அப்பிடியிருந்தும் உன்னால்
எப்படி என்னுடன் பேசாமல் இருக்கமுடிகிறது
இதற்கு விடை இற்றைவரை
என்னிடம் இல்லை

சப்தமில்லாமல்
நமக்குள் நடக்கும் மெளனயுத்தத்தில்
அடிக்கடி தோற்றுபோகும் தொலைபேசியும்
இப்போதெல்லாம் எனதருகே ஊமையாய்............

3 கருத்துரைகள்:

fasnimohamad said...

அன்பு என்றும் நினைவின் வழியேனும் வாழும் அருமையான கவிதை

Mathi said...

நன்றி சகோதரா உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாறலுக்கும்..

சுதர்சன் said...

பெண்கள் என்றுமே
தலை குனிந்துதான்
வாழ்கிறார்கள்

ஆம்!
அன்று ஆண்களை
பார்த்து தலை
குனிந்தார்கள்

இன்று செல்போனை
பார்த்து கொண்டே
செல்கிறார்கள்

Post a Comment