ஊர்
முழுக்க ஏதோ
ஒரு கலவரம்
உனை பார்க்காமல்
உன் விழிகளை ஸ்பரிசிக்காமல்
என்னால்
ஒரு நொடிகூட
இருக்க முடியவில்லை

ஊர் கலவர ஏக்கத்தில்
நான் மட்டும்
உன் விழிகளை ஸ்பரிசிக்காத
ஏக்கத்தில்
விடிய விடிய கண்விழித்து
உனை
நினைத்து உருகி

விடிந்தும்
விடியாததுமாய்
உன் விழிகளில் விழுந்து
அதில்
எனை கண்டபோதுதான்
நான்
நானானேன் .........


2 கருத்துரைகள்:

கவிஞர் அஸ்மின் said...

நல்லதொரு கவிதை
வாழ்த்துக்கள்

Mathi said...

நன்றி கவிஞரே ...

Post a Comment