பரபரப்பான
காலைநேரம்
நானும் பரபரப்பாய்
என் அன்றாட அலுவல்களில் மும்முரமாய்
சர்வமும்
 பரபரப்பாய் இருக்கும் போது
காக்காக்கள் கூட்டமும்
வீதியை விலத்தமுடியாதபடி
பரபரப்பாய்

நானும்
என்னவென்று
பதட்டமாய் எட்டி பார்த்தேன்
அங்கே
அடிபட்ட ஒருகாக்கைக்கு
ஆறுதலாய்
ஆதரவாய்
பல காக்காக்கள்
ஆரவாரமாய்
தன் சகாவினை
யாரும் அனுகமுடியதபடி
சகாவினை சுற்றி
அரண் அமைத்தபடி
கூட்டம் கூட்டமாய்

காக்கைகளின் துயரம்
என்னுள்ளும்
லேசாய்
நம் ஒற்றுமை
நம்முள் எப்படி தொலைந்தது
என்ற
ஏக்கம் எனக்குள்
சோகமாய் .........

9 கருத்துரைகள்:

Anonymous said...

அருமை ! வாழ்த்துக்கள் சகோதரி !!தொடர்ந்து தாருங்கள் !!!

Anonymous said...

Nice one...Keep it up....
Bavani

ஜீவிதன் said...

nice chellam..

Pena said...

காக்கைகளைக் கற்றறிந்த காக்கைகள் என்பான் மகாகவி பாரதி.என்னுடைய கவிதைத் தொகுப்பொன்றும் அதே பெயரில் வெளியானது."கபடமுள்ளவைகள் என்றா/காக்கைகளைச் சுட்டுகிறீர்கள்/இல்லை கிடைக்கும் உணவை கமுக்கமாக அமுக்க/கற்றுக்கொள்ளவில்லை அவைகள் இன்னும்"என்று சிலவரிகள் வரும்.இன்னும் மனிதன் காக்கைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Anonymous said...

vaalthukal sakothary.
Vetha. Elangathilakam.

மதுமதி said...

முடிவு சிறப்பு..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..

நம் தளத்தில் 'சூரியன் சுட்டெரிக்கிறான்'வருகையை எதிபார்க்கிறேன்..

Mathi said...

உங்கள் வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நட்புக்களே ..

sinnathambi raveendran said...

fine. short & sweet.

Mathi said...

உங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment