உன் காதல் 
எனக்குத்தான்  என்றாலும் 
அடிமனசில் எதோ 
இனம்புரியாத பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது
எப்போதும் ....

உன் கனவுகளை 
ஆசைப்பட்டாலும்  
கனவுகள் நிஜமாகுமோ இல்லையோ என்ற 
சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது 
இப்போது ..

உன்னிடம் சொல்ல 
என்னிடம் கோடி கதைகள் இருக்கிறது ஆனாலும் 
உன்னிடம் பேச நினைக்கும் போது 
என் வார்த்தைகளும் ஓடி ஒளிக்கிறது
உனக்குள் ..

இப்படி
நூறு சந்தேகம் எனக்குள் 
இருந்தாலும் 
ஒரு குழந்தையின் கரிசனத்தோடு என்னை 
நீ பார்க்கும் போது 
உன் காதல் தவிர 
வேறு எதுவும் தேவையில்லை என்று தோனுகிறது 
எனக்கு ........

2 கருத்துரைகள்:

மாலதி said...

சொம்மாவா சொன்னாரு வள்ளுவர் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் ......எல்லாமே காதல்தான்

Mathi said...

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ..

Post a Comment