இப்போதெல்லாம் 
நமக்குள் புதிது புதிதாய் முளைக்கும் 
சண்டைக்கான காரணங்கள் எனக்கு புரிவதேயில்லை 
எனக்கு 
உன்னோடு சண்டைகள் வேண்டாம் என்று நினைத்தாலும் 
அது முடிவதுவும் இல்லை 
ஒவ்வொரு சண்டைகள் முடிந்த பின்னும்
நினைத்துகொள்வேன்
இனி எப்போதும் நமக்குள் சண்டைகள் வேண்டாம் ஆனால்
ஒருபோதும் அது முடிவதும் இல்லை
முடியப்போவதும் இல்லை .
இந்த சண்டைகளுக்காக உன்னோடு
பேசாமல் இருக்க முடிவதுமில்லை என்னால் .............
♥♥....

0 கருத்துரைகள்:

Post a Comment