இன்று
மீண்டும் புதிதாய் பிறந்திருக்கிறேன்
இதுவரை கனவுகளில் மட்டுமே
நான் ரசித்த
என் உலகத்தை முதல் முதலாக
எழுத விழைகிறேன் ஆனால்
முடியவில்லை என்னால்
அதையும் மீறி
அவர்கள்
அவர்கள் தான்
கண் முன்னே வருகிறார்கள்


எத்தனையோ
வலிகளுடனும் போராட்டங்களுடனும் வாழும்
அந்த மனிதர்கள் எல்லாவற்றையும்
சாதரணமாக எடுத்துகொண்டு
மற்றவர்களோடு
எப்படித்தான் இயல்பாக பொருந்துகிறார்களோ
தெரியவில்லை இதுவரை


அவர்களிடம் தான்
படிக்கவேண்டும்
துன்பத்தின் போது சிரிப்பது எப்படியென்று


அவர்கள்
ஒன்றும்
என்னை போல் சாதாரனமவர்கள் இல்லை
அதையும் தாண்டி
எத்தனையோ பிரச்சனைகளோடு
வாழ்பவர்கள்


எப்படித்தான் எழுத முயன்றும்
எழுத்துகளில்
அவர்களை கொண்டுவர முயன்று
தோற்றுப்போகிறேன்

0 கருத்துரைகள்:

Post a Comment