என்
அறையின்
யன்னலோர வேப்பமர காற்றுக்கு மட்டும்
தெரியும்
நான் தொலைத்த
என் கனவுகள் பற்றி

பால் வீதியில்
நிலவு போல நானும்
சுதந்திரமாய் நீந்துவதாய்
சில சமயம்
நான் கனவுகள் கண்டதுண்டு

பல சமயம்
அந்த கடற்கரையில்
பாடியபடி பறக்கும்
ஒற்றை பறவை போல
நானும் சுதந்திரமாய் பறப்பதாய்
என் கனவுகள் வந்ததுண்டு

இப்போது
என் கனவுகளின்
சிறகுகள் உடைக்கபட்டு
கனவுகளும் ஊமையாய்
அழுகின்றன -தன்
சிறகுகளை
உடைத்தது யார் என
எனை கேட்டு .....

4 கருத்துரைகள்:

Muruganandan M.K. said...

சுதந்திரப் பறவையின் கீதமாக
இலக்கிய வெளியெங்கும்
ஒலிக்கட்டும் உங்கள் வரிகள்.
வாழ்த்துகிறேன்.

Mathi said...

நன்றி ஐயா உங்கள் கருத்துக்கும் பரிந்துரைக்கும் ....

nawzar said...
This comment has been removed by the author.
♔ம.தி.சுதா♔ said...

பறவையும் சிறகும் அருமையாயய் அலங்கரித்திருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

Post a Comment