ஓடிக்களைத்து
காலத்தின்வேகத்துடன்
இரவின் மடியில் தலைசாயும் நேரம்
கலைக்கப்பட்ட ஒப்பனையில் தெரியும்அழகை பார்ப்பது போல
உன்னில் தொலைத்த என் காதலை
ஏக்கமாய்திரும்பிப்பார்த்தபடி நான்
ஆனால் நீயோ

எனக்கு சொந்தமான
உன் காதலை தருவதாகசொல்லிசொல்லிஎன்னைஏய்க்கிறாய்
தினமும்எனக்கு சொந்தமான
உன் காதலை யாகசம் கேட்டு ஓர் யாசகனாய்
உன் வாசல்ஓரத்தில்
உடைந்த திருவோட்டுடன்
நீ தரப்போவதை
ஏக்கத்துடன்எதிர்பார்த்தபடி
நான்
நீ
எனக்கு யாகசமாய்
உன் காதலைதராவிட்டாலும் பரவாயில்லை
உன் காதலுக்கு ஏங்கித்தவிக்கும் எனக்கு
உன் ஓரப்பார்வைகளையாவது
எறிந்துவிட்டுப்போ…

0 கருத்துரைகள்:

Post a Comment