யந்திரமான உலகில் நானோ யந்திரமாய்
அவர்களும் என்னைப்போல் யந்திரமானர்களோ தெரியவில்லை
ரொம்ப நாளாச்சு
என் பழைய நண்பர்களை சந்தித்து பேசி

நான்
சின்ன பட்டாம் பூச்சியாய் இருந்த காலத்தில்
அவைகளுடன் வயல் முழுக்க பறந்திருக்கிறேன்
அம்மாவின் திட்டுகள்
அப்பாவின் அதட்டல்கள் எதையும் காதில் போடாமல்
அவைகள் பின்னே சின்ன தும்பியாய்
மூச்சு வாங்க வாங்க பறந்திருக்கிறேன் 

வெயில் பட்டு தெறிக்கும்
அந்த கண்ணாடி சிறகுகளை தரசொல்லி
சின்ன சின்ன பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்
என் கைவிரல்களில்
அவர்களுக்கு சிம்மாசனம் போட்டு
அந்த கண்ணாடி சிறகுகளின் வண்ணகலவை நினைத்து
நான் வியந்திருக்கிறேன்

இன்று பழைய ஞாபகத்தில்
வயல் முழுக்க தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை
என் நண்பர்கள்
கடத்தபட்டார்களா ?
காணாமல் போனார்களா ?
எனக்கு எதுவும் தெரியவில்லை

2 கருத்துரைகள்:

Netha said...

Superb. Meaning full Kavethi.
அம்மாவின் திட்டுகள்
அப்பாவின் அதட்டல்கள் எதையும் காதில் போடாமல்
அவைகள் பின்னே சின்ன தும்பியாய்
மூச்சு வாங்க வாங்க பறந்திருக்கிறேன்
amazing lyrics

ܔܢܜܔஇளந்தமிழன்ܔܢܜܔ said...

//வெயில் பட்டு தெறிக்கும்
அந்த கண்ணாடி சிறகுகளை தரசொல்லி
சின்ன சின்ன பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்//
அழகாய் இருக்கிறது..... கவி நயம் இருக்கிறது....
வாழ்த்துக்கள்

Post a Comment