பலிபீடம்
இரத்தம் தெளித்து கோலம் போடப்படுகிறது
ஞானக்கடவுள்
முகல் முழுக்க
அமைதியின் ரேகை கனக்கிறது
வெட்டுப்பாறையெங்கும்
தலைகள்

எல்லை தோட்டத்தில்
மணக்கும் மலர்களிலும்
லேசாய் இரத்தவாடை
கசிகிறது
காவியுடை பூண்டவன்
எல்லாம்
கட்டிலுக்கு பெண் கேட்டு
நாயாய்
பேயாய்

ஆட்சிகட்டிலின்
கால்களை இறுக்கி பிடித்தபடி
சொக்கட்டான் ஆடுகிறார்கள்
அரசு துறந்தவன்
வாரிசுகள்
சகுனியின்
பகடைகள்
அவிழ்த்துவிடப்படுகிறது
மெல்ல மெல்ல

எஸ் .மதி
 

1 கருத்துரைகள்:

Athisaya said...

மனதை கனக்க வைக்கும் வரிகள் சொந்தமே....!திட்டியில் இயைத்தால் பரரும் பார்கலாம்.சந்திப்போம் சொந்தமே!
வலை விடு தூது..!!!!

Post a Comment