புரிதலுக்கான 
மொழியை தேடி
உனர்விழந்து அலையும் போது
இலகுபாஷை தெரியும் என சொல்லி 
காட்டுப்பட்சி 
தன் வழி அழைத்தது

பட்சியை
குருவாக்கி
கண்ணசைவில் ஏவல் செய்து
கை கட்டி 
வாய் பொத்தி இருக்கையில் 
பட்சி மூர்ச்சையாகி மூழ்கிபோகும் போது
நான் மொழியின் அதிபதியானேன்

0 கருத்துரைகள்:

Post a Comment