நான் 
தனித்து அழுத இரவுகளில்
எனக்கு துனையாக என்னோடு கூடவந்து
சேர்ந்து கொண்டது
கறுப்புப்பூனை

எப்போதும்
இவற்றை வெறுத்தொதுக்கும்
நான்
சமீபத்தில்
எப்படி தோழமையானேன் என்பது
எனக்கே ஆச்சரியமாதொன்று

அடிக்கொருதரம்
தனக்கு பிடித்த இடங்களில் நின்று
என்னை
தன் கறுப்பு மஞ்சள் கண்களால்
அவதானிக்கிறது

என் வீட்டை
தன் வசமாக்கி
நான் கிறுக்கும் கவிதைக்குள்ளேயும்
வெளியேயும்
கவிதையாகிறது
அது....

0 கருத்துரைகள்:

Post a Comment