உன் அநாவசிய புறக்கனிப்புகளால்
தடுமாற தொடங்கியிருகிறது
மனம்
நிசப்தங்களால்
மூச்சு முட்டும் போது
வழிமாறி சிதறி ஓடத்தலைப்படுகிறது

பிழைகளை நியாயபடுத்த
வார்த்தைகளை தேடும் போது
குற்றங்களை மட்டும்
என்மேல் வரிசையாய் அடுக்கதொடங்குகிறாய்

உன் குற்றச்சாட்டுகளால்
நான் வார்த்தைகளை கோபமாய் எறியும் போது
சாதூரியமாய்
அதை மட்டும் எடுத்துக்கொண்டு
உன் கையிலுள்ள பகடைகளை
மெல்ல மெல்ல உருட்டதொடங்குகிறாய்

என் கோபங்கள்
உன் தந்திரங்ககள்
இரண்டின் வீரயம் தாங்காமல்
மொக்கிலே கருகதொடங்குகிறது
காதல்........

0 கருத்துரைகள்:

Post a Comment