முகம் தெரியா பறவையாய்
எனக்கான கூட்டை தேடி
கால் கணக்க அலைகிறேன்
நெடு நாளாய்

தாய்வாசம்
மறக்கடிக்கபட்டு
கடல் நீர் கடத்திவந்த தளிர்
கால் தடங்களை மட்டும் சுமக்கிறது

ஆறுதல்பட
ஓய்வெடுக்க
தலைசாயவென எல்லாவற்றிக்கும்
கடல் நீரை வாசம் பிடித்து
தனக்கானதை தேடுகிறது

கால் நனைக்கும்
அலைநீரில்
இரத்தவாடையோடு சேர்த்து
கணக்கிறது
கூக்குரல்களும்
ஒப்பாரிகளும்...........

0 கருத்துரைகள்:

Post a Comment