உன்னை 
நினைக்க தொடங்கியதும்
உடம்பின் அணுக்கள் எல்லாம்
உற்சாகக் கூக்குரல்கள்

என்ன செய்தாய் என்னை ?
மறக்க நினைக்கும் வினாடி எல்லாம்
கண்ணாம்பூச்சி ஆடுகிறாய்
என்முன்னே

என் இரவுகள்
எல்லாம் காணமல் போகிறது
காவல்கள் இருந்தும்

உனக்காக
கவிதை கிறுக்கும் போது
என் விரலிடையே பேனா கூட
நாட்டியம் ஆடுகிறது

தூக்குக்கைதியின்
நினைவுப்பெட்டகம் போல
உன் நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்
திரும்ப திரும்ப

ஒவ்வொன்றிக்கும்
கணக்குபண்ணி தரும் முத்தங்களின் எச்சங்கள்
கேலி செய்கின்றன
நீயில்லாத பொழுதுகளில்

வெட்கம் கெட்டமனசு
நீயிலாவிட்டலும் 
உன் நினைவுகளை தின்று தொலைக்கிறது ..............................

எஸ்.மதி

2 கருத்துரைகள்:

karthick dhick said...

Super mathi

பி.அமல்ராஜ் said...

Nice one..

Post a Comment