நிழல்களின் ராத்திரிகளில்
நான் மட்டும் தனியே மாட்டிக்கொள்ளும் போதுதான்
வெறுமையாய் தெரிகிறது எல்லாம்

நவீனத்தோடு ஒன்றாய்
ஒட்டி நின்றாலும்
மனசு மட்டும் தனித்துநின்று
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து முரன்பட்டுகொள்கிறது

எப்போதோ
ஒரு நாள் மட்டும்
கிராமத்து வாழ்க்கை முறையை கானும் போது
எதையோ இழந்துவிட்டோம் என்பது மட்டும்
நச்சென்று
உச்சியில் உறைக்கிறது

கார்பெற் வீதிகளில்
வழுக்கிக்கொண்டு வேகமாய் ஓடினாலும்
மரங்கள் குடைபிடிக்கும் ஒற்றையடி பாதையில்
சைக்கிளில் சீட்டை அடித்தபடி போவோரை பார்க்கும் போது
சின்னதாய் பொறாமை
அவர்கள் மீது எழத்தான் செய்கிறது

கூட்டுக்கு ஆர்பாட்டமாய் வ்ரும் பறவைகள் போல
எப்போதோ ஒருதடவை மட்டும்
சொந்தகூட்டில் ஒன்றாகும் உறவுகளை பார்க்கும் போதுதான்
நான் அநாதையில்லை என்று உனரமுடிகிறது

மழைக்காய் ஒதுங்கும்போது
சிறுவர்களின் சந்தோஸ கூக்குரல்
இடையிடையே எழும் மண்வாசம்
சோ என்ற மழையின் குதூகலகூக்குரல்
எதைஎதையோ ஞாபகபடுத்துகிறது

என்னதான் மாறினாலும்
யன்னலோர வேப்பம்காற்றுக்கும்
ஒற்றையடிபாதையில் கைகோர்த்து நடக்கவும்
காவோலை சரசரப்பை கேக்கவும்
மண்சட்டி பானையில் சமைத்ததை சாப்பிடவும் ஏங்கதான் முடிகிறது
தனிமையில்.....

1 கருத்துரைகள்:

kavithai (kovaikkavi) said...

மிக நல்ல வரிகள் ரசித்தேன்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment