தாய் பறவையின் சிறகுகளிடையே

பாதுகாப்பாய் இருக்கும் சிறுகுருவிபோல
உன் கைகளுக்குள்
நான் .........

நதியோர
நாணலை போல
உன் இஷ்டபடி எப்படி
வளைக்க முடிகிறது
என்னை .....


சிராய்ப்புகள் இல்லாமல் 
விபத்துக்குள்ளாகியவன்
சிறகுளை முளைக்க 
கட்டளை இட்டவன் 
அந்த அழுக்கு பையன் 
என் ஆனழகன் ..
இப்போதெல்லாம்
நான்
தனியாக இல்லை
எப்போதும்
என்னோடு பேசியபடி
நீயும்
உன்னோடு சண்டையிட்ட படி
நானும் ....உன் கண்களில் மட்டுமே
உணர்ந்தேன்
என் வெட்கத்தின் விடுதலை ..இந்த பிரபஞ்சத்தில்
நிரம்பி கிடக்கிறாய்
காதலாலும்
இன்னொரு
தந்தை யாகவும் .......
எஸ். மதி
 —

0 கருத்துரைகள்:

Post a Comment