மிக
அருமையாய்
பூத்து உதிரும்
நிஷாகந்தி பூப்போல
நீ
அபூர்வமாய்
என் மீது வீசும்
உன் ஓரப் பார்வைகளும் ..

மேகக் கூட்டத்தில்
ஒளித்து கொள்ளும்
நிலவை தேடி அலையும்
முகில் கூட்டம் போல
எனக்குள் தொலைத்த
உன்னை தேடி
எனது காதலும் ....

எப்படித்தான்
உன்னை மறக்க நினைத்தாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
சாகச பறவை போல்
உன் காதலும்

சின்ன சின்னதாய்
உனக்காக
நான்
சேமித்த
காதல் எல்லாம்
உனக்காய்
பத்திரமாய்
பூட்டி வைத்திருக்கிறேன்
என்
மனசுக்குள் ...............

2 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said...

மிக
அருமையாய்
பூத்து உதிரும்
நிஷாகந்தி பூப்போல/

மிக அருமையான உவமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Mathi said...

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தோழி ...

Post a Comment