என்னை
மறந்து விடு என்று சுலபமாக
சொல்லிவிட்டாய் நீ
உன் வார்த்தைகளை கேட்டு
என் இதயம்
பல நுறு பாறைகள் ஒன்றாக
வெடித்து நொறுங்கியது போல
நொறுங்கிவிட்டது

என்
கண்களை
பார்த்து
மணிக்கணக்காய்
பேச ஆசைபடும் உன்னால்
கண்களை பார்க்காமலே
என்னை மறந்துவிடு என்று
ஒற்றை சொல்லாய்
சொல்ல முடிந்தது
உன்னால்

உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
கவிதை சொல்லும்
என்னால் -நீ
சொல்லி சென்ற
ஒற்றை சொல்லிக்கு
மட்டும்
கவிதை சொல்ல
முடியவில்லை

உன்னை
மறந்துவிட நினைக்கிறேன்
ஆனால்
மிட்டாய்க்கு அழும் குழந்தை போல
என் இதயம் -உன்
காதலை
கேட்டு அழுகிறது
தினமும்

உடனுக்கு உடன்
எல்லாவற்றையும்
மறந்துவிடும் எனக்கு -நீ
சொல்லி சென்ற
ஒற்றை சொல்லையும்
உன்னையும்
மறக்கமுடியவில்லை
என்னால் ...........

2 கருத்துரைகள்:

90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a said...

கவிதை அருமை.

சே.குமார்

Mathi said...

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி தோழரே ...

Post a Comment