நீ
இன்னொருத்திக்கு
இப்போது
சொந்தம் என்று
தெரிந்தும்
என்னால்
உன்னையும்
உன் காதலையும்
மறக்கமுடியவில்லை

உன்னை
நினைக்ககூடாது என்று
சொல்லி சொல்லியே
உன்னையும்
என் மனதோடு உறவாடிய
உன் சாம்பல் விழிகளை
இப்போதெல்லாம்
சந்திக்காமல்
தவிர்த்து

என்
கனவுகளிலும்
நினைவுகளிலும்
உனக்கான
என் கவிதைகளிலும்
உன் நினைவுகள்
வேண்டாம் என
ஒதுக்கி

உனை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயத்தின்
ஏதோ
ஓர் மூலையில்
நீ வந்த தடங்கள்
எப்போதும் ....

4 கருத்துரைகள்:

கவிஞர் அஸ்மின் said...

இரவுதிர்ந்து போகும் இசைமலர்ந்து கூவும்
பரபரப்பாய் உலகம் மாறும்-உறவுனது
வரவுக்காய் விடியும்வரை விழித்திருந்தும்
நிறமுதிரந்து போகாதென் நிலா

சே.குமார் said...

காதல் வலி கவிதையில்...

Mathi said...

காதல் வலியும் சுகமான சுமைதான் ...

Sansu said...

kathal kathal

Post a Comment