கார் கால
மேகங்களெல்லாம்
ஒன்றாய் சேர்த்து
பளிச் பளிச்சென்று
மின்னுவது போல
உன்னை
காணும்
நிமிஷங்களெல்லாம்  
என்னிதயத்தில்  
பளிச் பளிச்சென்று
பல மின்னல்கள் ஒன்றாக
உருவாகி
என் கண்களின் வழியே
சிதறி தெறித்து
விழுகிறது
உன் காலடியே ...........

1 கருத்துரைகள்:

கோகுல் said...

இதய மின்னல்கள் காலடியில் சமர்ப்பணம்!
அருமை!

Post a Comment