சிலிர்க்கும் 
மழை நேரத்தில் 
சொட்டு சொட்டாய் 
விழுந்து சிதறும் 
மழைத்துளி போல 
என் மனத்தில் ஏதோ ஓர் முலையில் 
உன் காதலின் ஞாபக சிதறல்கள் 
சிதறி தெறிக்கிறது 

கொட்டும் மழையில்
குழந்தையாய் நனையும் என்னை 
உன் அதட்டல்கள் 
காதில் கேட்டும் கேளாதது போல் 
சிரிக்கும் என்னை 
கோபமாய் முறைக்கும் 
உன் பார்வைகள்   
என்னுள் 

சாரல் மழைக்கு போட்டியாய்
வரும் இடி மின்னலுக்கு 
பயந்து 
என் மெல்லிய தேகம் 
பதற 
உனை கட்டிக்கொள்ளும் போது மட்டும் 
என் மீதான 
உன் கோபங்கள் 
எங்கு போகிறதோ  
தெரியவில்லை  

உன் கைகளுக்கிடையில் 
அமைதியாய் இருந்து 
ஆரவாரமாய் 
மழையை ரசிக்கும் என்னிடம் 
உன் உதடுகள் 
என் காதுமடல்களில் 
பட்டும் படாமலும் சொல்லும் 
ஜ லவ் யுக்களால் 
என் மனதிலும் 
குட்டியாய் 
ஒரு சாரல் மழை ....

2 கருத்துரைகள்:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

மகேந்திரன் மகி said...

உன் கைகளுக்கிடையில்
அமைதியாய் இருந்து
ஆரவாரமாய்
மழையை ரசிக்கும் என்னிடம்
உன் உதடுகள் = மிக அற்புதமான வரிகள்

Post a Comment