உன்  தோளோடு
என்  தலைசரித்து
சின்ன கதைகள் பேசியபடி
நீ  ரசித்த எல்லாவற்றையும்
உன்னோடு   நான் ரசிக்கவேண்டும்

உன் காதலால்
உன் நினைவுகளால் 
மட்டுமே
என் கவிதைப் பக்கங்கள்
நிரப்பி வழியவேண்டும்

என் ஒவ்வொரு ஜென்மங்களிலும்
என் காதலாய்
என் இதய துடிப்பாய்
நீ வர வேண்டும்

என் நெற்றி வகிட்டில்
நீ ஆசையாய் தரும்
முத்தங்களின் சப்தங்கள்
மட்டும்
என் சொப்பனங்களிலும்
கேட்க வேண்டும்

உன்
இதய துடிப்பின்
 சப்தத்தில்
என் சப்தநாடிகளும்
சர்வமாய் அடங்க வேண்டும்

என் உதடுகள் உறைய
இமைகள் தட்டாமல்
உன் கண்களோடு
ஆசையாய்
நான் பேச வேண்டும்

உனக்குள்
உன் கண்களுக்குள்
நீ ஆசையாய்  சொல்லும்
பொண்டாட்டி
என்ற அழைப்பில்
என் ஆயுள் முழுதும்
நான் தொலைய வேண்டும் .........

1 கருத்துரைகள்:

nadaasiva said...

காதல் தேசம் கவிப் பூக்களால் நிறைந்துள்ளது, பணி தொடர வாழ்த்துக்கள் !

Post a Comment