சமூகத்தின் 
கண்களுக்கு 
நான் ஒரு சுதந்திர பறவை 
உண்மையில் 
நான் 
ஒரு கூண்டுக்கைதி 
இல்லை இல்லை 
நிரந்தர கைதி 

என் கைகளுக்கு 
விலங்குகள் போடவில்லை 
ஆனாலும் 
ஆனாலும் 
என் கைகள் 
சங்கிலி கொண்டு 
இறுக்கி பிணைக்கப்பட்டுள்ளது 

என் 
அசைவுகள் ஒவ்வொன்றும் 
அணு அணுவாய் 
அவதானிக்கப்படும் 
ஆனால் 
நான் ஒன்றும் 
தேசத்துரோகி 
அல்ல 

என்னால் 
முடிந்தது 
கம்பிகளுக்கு உள்ளே நின்று 
வானில்
கவிதை கிறுக்கியபடி 
பறக்கும் 
கரிச்சான் குருவியை 
ஏக்கமாய் 
பார்க்க மட்டும்தான்
     முடியும் ........

5 கருத்துரைகள்:

சோதிதாசன் said...

வாழ்ததுக்கள் உங்கள் கவிதைகள் புதியநோக்கிலே வெளிவர ஆரப்பித்திருக்கிறது பெண்ணிய பிரச்சனையை எளிமையபக முன்வைத்திருக்கிக்கிறீர்கள் வாழ்த்தக்கள்.

Pena said...

நன்றாக இருக்கிறது சிவமதிவதனி.இறுதியில் "முடியும்" தேவைதானா?ஆரம்ப வரியே "என்னால் முடிந்தது"என்றுதானே ஆரம்பிக்கிறது.

மனதோடு மன்னூரான் said...

நல்லதொரு கவிதை!சமூகத்தில் விரவிக்கிடக்கும் அடிமைத்தனங்களைச் சொல்ல முனைந்திருக்கிறீர்கள் அழகிய கவிதையாக.

Muruganandan M.K. said...

நல்ல கவிதை.
கரிச்சான் குருவியின் சுதந்திரத்தை
ஏக்கமாய் பார்க்கும் இடம் உச்சம்.

எஸ்.மதி said...

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ..

Post a Comment