என் யன்னலோர
வேப்பமர தோழி
தலை நிறைய பூச்சூடி
என் முன்னே வெட்கபட்டு வெட்கபட்டு நிற்கிறாள்

தலைகொள்ளா பூவோடு நிற்கும்
அவளை
அண்ணாந்து பார்க்கும் போது
என் மனசுக்குள்ளும்
மத்தாப்புச்சிதறல்கள்

என் பாட்டன்
கைகளில் சிறுமியாய் சிரித்தவள்
இன்று
குமரியாய்
காதலியாய்
தாயாய்
பாட்டையாய்
பல வடிவங்களில்
எனை பார்த்து சிரிக்கிறாள்

அவள் வீட்டில்
இப்போது விருந்துக்காலம்
புதுப்புது விருந்தாளிகள்
அவர்கள் பெயர் எல்லாம் எனக்கு தெரியாது
எட்டிப்பார்க்கும் என்னையும்
வா என்கிறாள்

தன் வீடு முழுக்க
வெள்ளைக்கம்பளம் விரித்து
தன்னோடு கதை பேச வரச்சொல்லி
சில்லென்ற காற்றை
என் முகத்தோடு மோதவிட்டு வேடிக்கை காட்டி சிரிக்கிறாள்
என் தோழி,,

1 கருத்துரைகள்:

S.Nethaaji said...

Wow. Very nice poem. It's amazing.
"என் பாட்டன்
கைகளில் சிறுமியாய் சிரித்தவள்
இன்று
குமரியாய்
காதலியாய்
தாயாய்
பாட்டையாய்
பல வடிவங்களில்
எனை பார்த்து சிரிக்கிறாள்"

It;s touching lyrics.

Write more.

Post a Comment