மானசீக வேண்டுகோளுக்கு செவிசாய்த்து

எனக்குள்
சுழன்றடித்து பறக்கும் பட்சி
அமைதியாய்
என் முன்னே

சினேகமாய்
நான் வைத்த கேள்விகளுக்கு
பதில் சொல்ல இஷ்டமில்லை என்ற
தோரனையோடு
குளக்கரை கொக்காய்
ஒற்றை கண்ணை திறந்தபடி தவத்திலிருந்தது

பட்சியின்
வாயிலிருந்து வார்த்தைகளை வாங்க முயன்று
நான் தோற்றுகொண்டிருக்கையில்
விழித்துப்பார்த்து
சம்பந்தமில்லாமல் கேள்விகேட்டு
சங்கடபடுவதை பார்த்து
எக்காளிப்பாய் சிரித்தது
பிதற்றியது
பெரும் குரலெடுத்து ஓவேன அழுதது
என் முகத்தில் எதையோ தேடியது

சில சுடோக்குகளை
முன்னே எறிந்துவிட்டு
கோழித்தூக்கம் போட்டது
பட்சியின் போக்கு புரியாமல் திகைக்கையில்
கானாமல் போனது
வைத்த கேள்விகளையும் எடுத்துகொண்டு..................

1 கருத்துரைகள்:

Athisaya said...

வணக்கம் சொந்தமே..தங்கள் தளத்திற்கான முதல் வருகை இது..அற்புதமான படைப்புகள்.இப்படி எத்தயையோ கேள்விகளை முன்னிறுத்தி பேசுவதற்கு தயாராகும் போதெல்லாம் மனப்பட்சி ஏதோ மாயம் காட்டி ஓடித்தான் போகிறது....!சந்திப்போம் சொந்தமே

Post a Comment