சஞ்சாரம் இல்லாத
தீவில்
உன் ஞாபங்களோடு மட்டும்
நான் தனித்து நிற்கிறேன்
வழிமறந்து

கனவுகளை சுமந்தபடி
வெளிசெல்ல எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
கவனமாக
மிக கவனமாக

என் கவனங்களை சிதைக்க
கைதேர்ந்த மாந்திகனின் திட்சன்யத்தோடு
தெரிந்த வித்தையெல்லாம்
பார்த்து பார்க்காமல் எறிகிறாய்
பாதைகளை மறித்தபடி

நீ
வீசும் மாயையில்
சிக்கியும் சிக்காமலும்
நான் காட்டுத்தனமாய் ஓடுகிறேன்
எதையும் புரிய மறுத்து..............

0 கருத்துரைகள்:

Post a Comment